ஜாம்பவான்களின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்த படிக்கல்
Padikkal breaks 27 years record of dravid: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தேவ்தத் படிக்கல் புதிய சாதனை படைத்தார்.
கொழும்பில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய துடுப்பாட்ட வீரர் தேவ்தத் படிக்கல் புதிய சாதனை படைத்தார்.
தேவ்தத் படிக்கல்
இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல், முதல் டெஸ்டில் 167 ஓட்டங்கள் குவித்தார்.

அதேபோல் கொழும்பில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டிலும் 117 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டின் 27 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டு மைதானங்களில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் (328) எடுத்த வீரராக தேவ்தத் படிக்கல் உள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |