இலங்கைக்கு எதிராக சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்
இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.
கொழும்பில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் சதம் அடித்தார்.
இலங்கை 363 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இலங்கை கிரிக்கெட் லெவன் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவிந்து ரஸந்த 71 ஓட்டங்களும், நிஷான் மதுஷ்கா 66 ஓட்டங்களும், சோனல் தினுஷா 52 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக்அவுட் ஆக, கே.எல்.ராகுல் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தேவ்தத் படிக்கல் சதம்
ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 63 ஓட்டங்கள் எடுத்து ரிடையர் ஹர்ட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய ரிஷாப் பண்ட் (2), துருவ் ஜுரேல் (1) ஆகியோர் சொதப்பினர்.
எனினும் தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) அபாரமாக ஆடி சதம் விளாசினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் குவித்துள்ளது.
படிக்கல் 142 ஓட்டங்களுடனும், பிரார் 36 (18) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ரமேஷ் மெண்டிஸ், அசங்கா மனோஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |