சிக்ஸர் அடித்து அறிமுக டெஸ்டிலேயே அரைசதம் விளாசிய படிக்கல்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தேவ்தத் படிக்கல் அரைசதம் விளாசினார்.
தரம்சாலாவில் நடந்து வரும் 5வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
இரண்டாம் நாளான இன்று ரோஹித் சர்மா 103 ஓட்டங்களும், கில் 110 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் தேவ்தத் படிக்கல் தனது அறிமுக டெஸ்டில் களமிறங்கினார். அவருடன் கைகோர்த்த சர்ப்பராஸ் கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Fifty on debut for the 23-yr-old Devdutt Padikkal! ⚡#DevduttPadikkal #INDvENG #Cricket #Sportskeeda pic.twitter.com/H6xUyheugo
— Sportskeeda (@Sportskeeda) March 8, 2024
இந்தக் கூட்டணி 97 ஓட்டங்கள் குவித்தது. அரைசதம் அடித்த சர்ப்பராஸ் கான் 56 (60) ஓட்டங்கள் எடுத்த நிலையில் பஷீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பவுண்டரிகளை விரட்டிய தேவ்தத் படிக்கல் சிக்ஸர் அடித்து, தனது முதல் அரைசதத்தினை அறிமுக போட்டியிலேயே பதிவு செய்தார்.
இதன்மூலம் அறிமுக டெஸ்டில் அரைசதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
India continue to dominate in Dharamsala.#WTC25 | #INDvENG ?: https://t.co/E49AEcZe7M pic.twitter.com/a2fxsokbuw
— ICC (@ICC) March 8, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |