199 ஓட்டங்களில் நடுவரின் கொடுத்த அவுட்: அதிர்ச்சியுடன் வெளியேறிய படிக்கல் - வைரல் வீடியோ
Devdutt padikkal missed double century: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் தேவ்தத் படிக்கல் 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி வீரர் தேவ்தத் படிக்கல் 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியா 488
லின்கோனில் நடந்து வரும் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்தியா ஏ அணி துடுப்பாட்டம் செய்து வருகிறது.
🔴DEVDUTT PADIKKAL ANGRY OVER A CONTROVERSIAL UMPIRING DECISION! 🤯 - Padikkal was batting on 199 when the bowler delivered the ball wide. - Padikkal tried to play the delivery, but the umpire suddenly declared him out, apparently believing the ball had edged the bat. - Padikkal was left shocked by the decision. Note: There is no DRS in unofficial Test matches. ❌ https://t.co/WfZMaQfAXM
— Sam (@cricsam02) October 26, 2026
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 488 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதுவரை 284 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) சதம் விளாசினார். இரட்டை சதத்தை நோக்கி பயணித்த அவர் 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால், நடுவர் தவறாக அவுட் கொடுத்ததாக படிக்கல் வாதிட்டார்.
படிக்கல் அதிருப்தி
கிப்ஸன் ஓவரில் பந்து துடுப்பின் விளிம்பில் பட்டு leg side திசையில் செல்ல, நடுவர் அவுட் என்று அறிவித்தார்.
நடுவரின் இந்த தீர்ப்பால் மிகுந்த அதிருப்தியடைந்த படிக்கல், தனது துடுப்பிற்கும் பந்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்ததை சைகை மூலம் சுட்டிக்காட்டினார்.
எனினும், அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் DRS முறை இல்லாததால் படிக்கல் விரக்தியுடன் வெளியேறினார். அவர் 248 பந்துகளில் 80.24 ஸ்ட்ரைக் ரேட்டில் 3 சிக்ஸர், 24 பவுண்டரிகளை விளாசினார். அவருக்கு முன் சாய் சுதர்சன் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
