டி வில்லியர்ஸ் சொன்ன சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் இவர் தான்!
தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான ஏபி டிவில்லியர்ஸ் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை உலகின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரரென எனப் பாராட்டியுள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டி
கடந்த சில வருடங்களாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. திடீர், திடீர் திருப்பங்களும், பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டமும் ரசிகர்களை டி20 பக்கம் இழுக்க காரணமாகியுள்ளது.
@Sportzpics / IPL
இந்த நிலையில் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 115 ஆட்டங்களில் 4008 ரன்களை குவித்து பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 3853 ரன்களை குவித்து இரண்டாவது இடத்திலுள்ளார். பவுலர்களில் டிம் சவுதி முதலிடத்திலும்,சகீப் அல் ஹாசன் இரண்டாவது இடத்திலுமிருக்கிறார்கள்.
சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முன்னாள் ஜாம்பவான் ஏ.பி.டிவில்லியர்ஸ் அளித்த பேட்டியில் அவரிடம் யார் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் என்ற கேள்வி கேட்கப்பட்டது. எல்லோரும் விராட் கோலியைத் தான் சொல்வார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் ஆப்கானிஸ்தான் அணி வீரரான ரஷீத் கானை கூறியுள்ளார்.
@cricket365
”அணி எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தாலும் சிங்கம் போல் மனதைத் தைரியமாக வைத்து வெற்றியை நோக்கிச் சிறப்பாக ஆடக்கூடியவர்” என அவரை பாராட்டியுள்ளார். உலகில் நடக்கும் எந்த 20 ஓவர் பீரிமியர் லிக் போட்டிகளிலும் ரஷீத் கான் பெயரைப் பரிசீலிக்காமல் இருப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் 77 போட்டிகளில் 126 விக்கெட்டுகளை வீழ்த்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.