கொல்கத்தாவை ருத்ரதாண்டவம் ஆடிய டிவில்லியர்ஸ்-மேக்ஸ்வேல்: ஆண்ட்ரூ ரசுலை கதறவிட்ட சிராஜ்

Royal Challengers Bangalore Kolkata Knight Riders Indian Premier League Andre Russell
By Kaviarasan Apr 18, 2021 02:10 PM GMT
Report

பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதில் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

அதன் படி முதலில் ஆடிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரரான கோஹ்லி 5 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ராஜத் படிதார் 1 ஓட்டங்களிலும் வெளியேறினார்.

இதனால் பெங்களூரு அணி 9 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

ஆனால், 3-வது விக்கெட்டிற்கு தேவ்தத் படிக்கலுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்தில் அரைசதம் அடித்தார்.

கொல்கத்தாவை ருத்ரதாண்டவம் ஆடிய டிவில்லியர்ஸ்-மேக்ஸ்வேல்: ஆண்ட்ரூ ரசுலை கதறவிட்ட சிராஜ் | Devilliers Maxwell Smash Kkr 204 Runs 

அணியின் எண்ணிக்கை 95 ஓட்டங்களை எட்டிய போது, தேவ்தத் படிக்கல் 25 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த 360 டிகிரி அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் ருத்ரதாண்டவம் ஆடினார்.

மேக்ஸ்வேல் மற்றும் டிவில்லியர்ஸின் அதிரடியால் பெங்களூரு அணி, 200 ஓட்டங்களை நோக்கி சென்றது. சிறப்பாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் 49 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தாவை ருத்ரதாண்டவம் ஆடிய டிவில்லியர்ஸ்-மேக்ஸ்வேல்: ஆண்ட்ரூ ரசுலை கதறவிட்ட சிராஜ் | Devilliers Maxwell Smash Kkr 204 Runs 

டி வில்லியர்ஸ் 27 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த ஜேமிசன் உடன் இணைந்து கடைசி மூன்று ஓவரையும் துவம்சம் செய்ய, பெங்களூரு அணி இறுதியாக 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்தது.


டி வில்லியர்ஸ் 34 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் சுபமன் கில் 21 ஓட்டங்களிலும், ராகுல் திரிபாதி 25 ஓட்டங்களிலும் என வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் 74 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

கொல்கத்தாவை ருத்ரதாண்டவம் ஆடிய டிவில்லியர்ஸ்-மேக்ஸ்வேல்: ஆண்ட்ரூ ரசுலை கதறவிட்ட சிராஜ் | Devilliers Maxwell Smash Kkr 204 Runs

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்(2) ஆண்ட்ரூ ரசுல் 20 பந்தில் 31 ஓட்டங்களில் அவுட்டாக இறுதியாக கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.


இப்போட்டியில் ஆட்டத்தின் 19-வது ஓவரில் ஆண்ட்ரூ ரசுலை வைத்து, மொகது சிராஜ் சிறப்பாக வீசி ஒரு ஓட்டம் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

அதுவே ஆட்டத்தை முற்றிலும் மாற்றியது. இதனால் பெங்களூரு ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

கொல்கத்தாவை ருத்ரதாண்டவம் ஆடிய டிவில்லியர்ஸ்-மேக்ஸ்வேல்: ஆண்ட்ரூ ரசுலை கதறவிட்ட சிராஜ் | Devilliers Maxwell Smash Kkr 204 Runs


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US