ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இலங்கை வீராங்கனை! U19 போட்டியில் மிரட்டும் இளம் பெண் சிங்கம்
மகளிர் U19 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது.
U19 உலகக்கோப்பை
19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் டி20 தொடர் 14ஆம் திகதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக பயிற்சி போட்டிகளில் ஒவ்வொரு அணியும் விளையாடி வருகின்றன.
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி விளையாடியது.
தேவ்மி விஹங்கா மிரட்டல் பந்துவீச்சு
முதலில் ஆடிய ஸ்கொட்லாந்து, இலங்கையின் தேவ்மி விஹங்காவின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் 16.3 ஓவர்களில் அந்த அணி 87 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய தேவ்மி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதுடன் மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
@srilankacricket.lk
இலங்கை வெற்றி
பின்னர் ஆடிய இலங்கை அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 91 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தேவ்மி 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.
மேலும் உலகக்கோப்பை போட்டியில் தேவ்மி இலங்கை அணியின் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Twitter(Sri Lanka Cricket)