புது வருடத்தில் முதல் சதம் விளாசிய வீரர்! தொடர்ச்சியாக இரண்டாவது முறை
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே சதம் விளாசினார்.
டேவன் கான்வே
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்கள் குவித்தது.
@AFP
தொடக்க வீரர்கள் டேவன் கான்வே 122 ஓட்டங்களும், டாம் லாதம் 71 ஓட்டங்களும் குவித்தனர். கான்வே இந்த ஆண்டின் தொடக்கத்தில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவரது சதத்தில் ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடங்கும்.
@AP Photo/Fareed Khan
கடந்த ஆண்டும் (2022) அவர் தான் ஆண்டின் தொடக்கத்தில் முதல் சதத்தை விளாசி இருந்தார். மொத்தம் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கான்வே, 4 சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் 1150 ஓட்டங்கள் விளாசியுள்ளார். இதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்.
@AP Photo