உணவில் வெங்காயம் கலந்திருந்ததால் ஹொட்டலை அடித்து நொறுக்கிய பக்தர்கள்.., வைரலாகும் வீடியோ
உணவியல் வெங்காயம் சேர்த்து பரிமாறப்பட்டதால் ஆத்திரமடைந்த பக்தர்கள் ஹொட்டலை அடித்து நொறுக்கியுள்ளனர்.
வைரலாகும் வீடியோ
டெல்லி - ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில், கான்வர் யாத்ரீகர்கள் அடங்கிய 20 பேர் கொண்டகுழு வந்துள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் வெங்காயம் சேர்த்து பரிமாறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புர்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஃபலௌடா புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வந்து ஹொட்டலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது, உணவில் வெங்காயம் சேர்த்து பரிமாறப்பட்டதால் ஆத்திரமடைந்த பக்தர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர், அங்கிருந்த மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதையடுத்து, தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பக்தர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், இது குறித்து எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாததால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
In UP's Muzaffarnagar, kanwariyas restored to vandalism and destroyed the furniture at a dhaba after they allegedly discovered onion in their food. pic.twitter.com/3QCmBZvdzR
— Piyush Rai (@Benarasiyaa) July 8, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |