திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5 கிலோ நகைகள் அணிந்து வந்த பக்தர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5 கிலோ நகைகள் அணிந்து வந்த பக்தரை அனைவரும் ஆச்சரியமுடன் பார்த்தனர்.
5 கிலோ நகைகள்
நேற்று 2025-ம் ஆண்டின் முதல் நாளான ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், இலவச தரிசனம் செய்வதற்காக சுமார் 14 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
புத்தாண்டான நேற்று அதிகாலை 2 மணிக்கு திருப்பாவை சேவையும், அதனைத் தொடர்ந்து அர்ச்சனை, தோமாலை சேவை என ஆர்ஜித சேவைகள் நடைபெற்றன.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று காலை விஜயவாடாவில் உள்ள கனகதுர்கையம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வழிபட்டார்.
அந்தவகையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜய குமார் என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தந்திருந்தார்.
இவர், கோயிலுக்கு வரும்போது 5 கிலோ எடையில் தங்க நகைகளை அணிந்து வந்திருந்தார். அப்போது, கோயிலுக்கு வந்த சக பக்தர்கள் அவரை ஆச்சரியமுடன் பார்த்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |