கோவிலில் QR Code காட்டி வழிபடும் பக்தர்கள் - எங்கே தெரியுமா?
கோவிலில் QR Code காட்டி பக்தர்கள் வழிபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பக்தர்கள் கோவிலுக்கு சென்றால், கடவுளை இருகரம் கூப்பி வணங்குவார்கள்.
QR Code காட்டி வழிபாடு
ஆனால் கோவில் ஒன்றில் பக்தர்கள் தங்களது ஸ்மார்ட் போனில் உள்ள QR Code-ஐ வழிபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. .

சீனாவின் ஹாங்சோவில் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான லிங்யின் கோவிலில் இந்த சடங்கு நடைபெறுகிறது.
கோவில்களில் காணிக்கை செலுத்த வழக்கமான உண்டியல் மட்டுமல்லாது, நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப UPI மூலம் காணிக்கை செலுத்தும் வசதி சீன கோவில்களில் உள்ளது.
அப்படி காணிக்கை செலுத்திய பின்னர் பக்தர்கள் தங்களது போனின் QR Code திரையை அங்கே உள்ள தூப பர்னரின் மேல் வைத்து வழிபடுகிறார்கள்.
சிலர் தூப குச்சிகள் எரியும் நெருப்பின் மேல் தங்களது QR Code திரையை காட்டுகின்றனர்.
காணிக்கை செலுத்திய பின்னர் QR Code திரையை இவ்வாறு காட்டுவது, உங்கள் காணிக்கையை தெய்வீகத்துடன் இணைக்கும் எனவும், நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம், பொருளாதார பலன், வெற்றி உங்கள் வாழ்க்கையில் நடக்கும் என நம்பப்படுகிறது.
இது பாரம்பரிய நம்பிக்கையுடன், நவீன தொழில்நுட்பத்தை இணைக்கும் சடங்காக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |