35 பந்துகளில் சதம்! 162 ஓட்டங்கள் விளாசல்.. சிக்ஸர் மழை வீடியோ
பிரேவிஸ் குட்டி ஏபி டி வில்லியர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்
52 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டி பிரேவிஸ் சாதனை படைத்தார்
தென் ஆப்பிரிக்க வீரர் பிரேவிஸ் 57 பந்துகளில் 162 ஓட்டங்கள் விளாசி உலக சாதனை படைத்தார்.
CSA டி20 சேலென்ச் தொடரின் நேற்றைய போட்டி Senwes Park மைதானத்தில் நடந்தது. இதில் டைட்டன்ஸ் மற்றும் நைட்ஸ் அணிகள் மோதின.
டைட்டன்ஸ் அணியில் களமிறங்கிய 19 வயது வீரர் டெவல்ட் பிரேவிஸ் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிரணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 35 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார்.
இது அவருக்கு முதல் டி20 சதம் ஆகும். அதன் பின்னரும் சிக்ஸர் மழை பொழிந்த பிரேவிஸ், 57 பந்துகளில் 162 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 13 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த சதத்தின் மூலம் பிரேவிஸ் பல சாதனைகளை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த 5வது வீரர் பிரேவிஸ் ஆவார்.
Twitter (@DomesticCSA)