சுவையான Dhaba style egg gravy: செய்வது எப்படி?
முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது.
எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும்.
சுவையான தாபா ஸ்டைல் முட்டை கிரேவி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- முட்டை
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- வெண்ணெய்- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- மல்லி தூள்
- கரம் மசாலா
- உப்பு
- காய்ந்த மிளகாய்-2
- பட்டை
- கிராம்பு-2
- ஏலக்காய்-2
- பிரிஞ்சி இலை-2
- சோம்பு-1ஸ்பூன்
- மிளகு-4
- வெங்காயம்-2
- இஞ்சி பூண்டுn பேஸ்ட்
- தக்காளி-2
- கஸ்தூரி மேத்தி-2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை
செய்முறை
முட்டையை வேகவைத்து உரித்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து வெண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து அதில் 1/2ஸ்பூன் உப்பு, 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்,1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து முட்டையை சேர்த்து வதக்கவும்.
archana's kitchen
3 நிமிடம் வதக்கிய பின்பு தனியாக அதை எடுத்து வைத்து கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மிளகு, காய்ந்த மிளகாய்,சோம்பு சேர்த்து வதக்கி பின் பொடியை நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போதும் வரை நன்கு வதக்கவும்.
Dhaba style
பின் அதில் 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்,1ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள்,1ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
இதனைதொடந்து அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்து கிரேவி பதம் வந்ததும் அதில் முட்டையை சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பின் கஸ்தூரி மேத்தி 2 ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறங்கினால் சுவையான தாபா ஸ்டைல் முட்டை கிரேவி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |