விஜய் இந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் - தாடி பாலாஜி கோரிக்கை
விஜய்யை சந்தித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி சேர கோரிக்கை வைப்பேன் என தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
தாடி பாலாஜி
2026 சட்டமன்ற தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, பிரச்சாரத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய்க்கு கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
சம்பவத்தன்றே சென்னை திரும்பிய அவர், 3 நாட்களுக்கு பின்னர் ஒரு வீடியோ மட்டும் வெளியிட்டார். தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் அவர் வீட்டின் உள்ளே இருப்பது விமர்சனத்தை பெற்றுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில், மற்ற முக்கிய நிர்வாகிகளும் தற்போது கரூர் செல்லவில்லை.
அதேவேளையில் தவெக உறுப்பினரான நடிகர் தாடி பாலாஜி, கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி
இந்நிலையில், எனக்கு விஜய்யை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவர் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்துவேன் என்று பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "தலைவர் அரசியலுக்கு புதிது என்றாலும், அனுபவமுள்ள 2ஆம் கட்ட தலைவர்கள் அவருக்கு வழிகாட்டி இருக்க வேண்டும். தவெகவில் 2ஆம் கட்ட தலைவர்களாக விசுவாசிகளை நியமித்திருந்தால் கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது.
இந்த சம்பவம் அவரை நிச்சயம் பாதித்திருக்கும். கரூர் சம்பவத்திற்கு பிறகு அவர் தனித்து விடப்பட்டுள்ளார். விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பேன்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |