பாகிஸ்தானுக்கு எதிராக அபார சதம் விளாசிய இலங்கை வீரர்! காலேவில் மிரட்டலான ஆட்டம்
காலேவில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கையின் ஆல்-ரவுண்டர் வீரர் தனஞ்சய டி சில்வா சதம் விளாசியுள்ளார்.
இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது.
இரண்டு அணிகளும் முதல் இன்னிங்சை ஆடிய நிலையில், 4வது நாளான இன்று இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
கேப்டன் கருணரத்னே அரைசதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், தனஞ்ஜய டி சில்வா நங்கூரமாக நின்று ஆடினார். பவுண்டரிகளை விரட்டிய அவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார்.
அவரது சதத்தில் 16 பவுண்டரிகள் அடங்கும். இந்த டெஸ்ட் போட்டியில் இதுவரை இரு அணிகளையும் சேர்த்து சதம் அடித்துள்ள ஒரே வீரர் தனஞ்ஜய டி சில்வா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhananjaya de Silva brings up his ninth Test ?!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 27, 2022
Well Played, DDS ? #SLvPAK pic.twitter.com/hn9hdgo5sV