விக்கெட்டை காப்பாற்ற நினைத்து ஸ்டம்பை அடித்து அவுட் ஆன இலங்கை வீரர்! திணறி வரும் மேற்கிந்திய தீவு: வைரலாகும் வீடியோ
மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் தனஞ்சிய டி சில்வா ஹிட் விக்கெட் ஆகி வெளியேறும் வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி, அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21-ஆம் திகதி துவங்கியது.
இதில் முதலில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை அணி 386 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக டிம்யுத் கருணரத்னே 147 ஓட்டங்களும், தனஞ்சிய டி சில்வா 61 ஓட்டங்களும் எடுத்தனர்.
Here's the moment Dhananjaya de Silva becomes the second Sri Lankan to hit his own wickets twice in Test cricket. #SLvWI pic.twitter.com/DyGShkaByE
— ?FlashScore Cricket Commentators (@FlashCric) November 22, 2021
மேற்கிந்திய தீவு அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடி வரும் மேற்கிந்திய தீவு அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் இலங்கை அணி வீரரான தனஞ்சிய டி சில்வா ஹிட் அவுட் முறையில் அவுட் ஆகி வெளியேறிய வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பந்தை எதிர் கொண்ட தனஞ்சிய டி சில்வா அதை தடுத்து ஆட முற்பட்டார், ஆனால் பந்தானது ஸ்டம்பை நோக்கி சென்றதால், அவர் பந்தை தடுக்க நினைத்தார்.
ஆனால் எதிர்பாரதவிதமாக பேட், ஸ்டம்ப் மீது பட்டதால், பைஸ் கீழே விழுந்து பரிதாபமாக அவுட் ஆகி வெளியேறினார் தனஞ்சிய டி சில்வா.