ஆப்கானிஸ்தானை பந்தாடிய இலங்கை! அடித்து நொறுக்கிய தனஞ்சய டி சில்வா
தனஞ்சய டி சில்வா இரண்டு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசினார்
இலங்கையின் ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்
பிரிஸ்பேனில் நடந்த டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் குர்பாஸ் 28 ஓட்டங்களும், கானி 27 ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து களமிறங்கிய இப்ராஹிம் அதிரடியாக 22(18) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், ஹசரங்கா ஆப்கானிஸ்தானின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியதுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்தது.
Powerplay done!
— ICC (@ICC) November 1, 2022
Afghanistan get off to a steady start, scoring 42/0 ?#T20WorldCup | #AFGvSL |?: https://t.co/OG41aOOU6f pic.twitter.com/GgbWYKEOpk
Afghanistan post 144/8 at the end of their 20 overs.#SLvAFG #RoaringForGlory #T20WorldCup pic.twitter.com/5Mz6BTigfR
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) November 1, 2022
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் நிசங்கா 10 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தனஞ்சய டி சில்வா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Sri Lanka start cautiously after losing an early wicket in the Powerplay ?#AFGvSL | ?: https://t.co/NKvN2jDT1B
— ICC (@ICC) November 1, 2022
Head to our app and website to follow the #T20WorldCup action ? https://t.co/76r3b7l2N0 pic.twitter.com/jhn3Z7OBsL
குசால் மெண்டிஸ் 25 ஓட்டங்களில் வெளியேற, அசலங்கா 19 ஓட்டங்களும், ராஜபக்ச 18 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார்.
⭐ A batting masterclass from DDS! @dds75official#SLvAFG #RoaringForGlory #T20WorldCup pic.twitter.com/k8bIRvJGAs
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) November 1, 2022
இலங்கை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.