"விவாகரத்து தீர்ப்பு" அன்று அழுதுகொண்டே இருந்தேன்! மனம் திறந்த சாஹலின் முன்னாள் மனைவி
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹலிடமிருந்து விவாகரத்து பெற்றபோது அழுததாக, முன்னாள் மனைவியான தனஸ்ரீ வர்மா தெரிவித்துள்ளார்.
சாஹல் விவாகரத்து
2024ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் , தனஸ்ரீ வர்மா ஜோடி விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் விவாகரத்து பெற்றனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
அத்துடன் சாஹலை பிரிந்த பிறகு தனஸ்ரீ ஒன்லைனில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அதே சமயம் Rj மஹ்வஷ் என்ற பிரபலமான பெண்ணுடன் சாஹல் டேட்டிங் செய்வதாக செய்திகள் பரவின.
மனம் திறந்த முன்னாள் மனைவி
இந்த நிலையில் தனஸ்ரீ தனது விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், "தீர்ப்பு வழங்கப்படவிருந்தபோது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். நான் எல்லோர் முன்னிலையிலும் அலறி அழ ஆரம்பித்தேன்.
எனக்கும் என் குடும்பத்திற்கும் அது மிகவும் உணர்ச்சியான தருணமாக இருந்தது. நான் அழுதுகொண்டே இருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. எல்லோர் முன்னிலையிலும் அது நடந்தது.
அந்த நேரத்தில் நான் என்ன உணர்ந்தேன் என்பதை என்னால் வெளிப்படுத்தக் கூட முடியவில்லை.
நிச்சயமாக! அதெல்லாம் நடந்தது, சாஹல் முதலில் வெளியேறினார்" என்றார்.
மேலும் அவர், மக்கள் நம்மை மட்டுமே குறை கூறுவார்கள் என்று தெரிந்தபோது காரில் அமர்ந்து மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.
தீர்ப்பு அன்று சாஹல் அணிந்திருந்த டி-ஷர்ட் பேசுபொருளானது. அதைக் குறிப்பிட்டு பேசிய தனஸ்ரீ, "இந்த டி-ஷர்ட் ஸ்டண்ட் பற்றி நான் அறிவதற்கு முன்பே, விவாகரத்திற்கு மக்கள் என்னைப் பொறுப்பாகப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
இதனை கடந்துபோக வேண்டும் என்பது என் மனதில் இருந்தது. என் செல்போனை பார்க்கும்வரை, நான் அவரை பிரிவதை நம்ப விரும்பவில்லை. அவர் உண்மையில் இதை செய்தாரா? என ஒரு கணம் தோன்றியது. அது முடிந்துவிட்டது.
நான் ஏன் அழ வேண்டும்? எங்கோ நான் மோசமாக உணர்ந்தேன். என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். இதற்கு நான் ஏன் அழ வேண்டும் என்பதே எனக்குத் தேவையான உந்துதலாக இருந்தது. நான் சிரிக்க வேண்டியது உண்மையில் எனக்கு உதவியது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |