ரயில் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட இளம்பெண்: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த திடுக் தகவல்
தானே நகரில் இளம்பெண்ணொருவர் ரயில் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி, மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள தானே நகரில், 17 வயதுப் பெண்ணொருவர் ரயில் மோதி உயிரிழந்தார்.
அது ஒரு விபத்து என பொலிசார் முதலில் எண்ணிய நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

காதலர் கைது
அதைத் தொடர்ந்து பொலிசார் அவரது மொபைலை ஆய்வு செய்ய, அவர் டெலிவரி பாயாக வேலை செய்யும் ஒரு இளைஞருடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தது தெரியவந்தது.
அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இளம்பெண் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார், அவரது முடிவுக்கு, அவரது காதலர் என கருதப்படும் அந்த இளைஞர் காரணமாக இருந்திருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |