தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து: சமாதானம் பேச மறுத்த அந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?
தங்களது 18 ஆண்டுகால திருமண வாழ்வை முறித்துக் கொண்டுள்ளனர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர்.
நண்பர்களாக பழகத் தொடங்கி, காதலால் இணைந்து வெற்றிகரமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடியின் திடீர் பிரிவு அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர்களது விவாகரத்தை ரஜினிகாந்த் எப்படி எடுத்துக்கொள்வோரோ என்ற கவலையில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
இந்நிலையில் இவர்களுக்குள் பல வருடங்களாவே சச்சரவுகள் இருந்து வந்ததாகவும், ஒருகட்டத்தில் சகித்துக்கொள்ளாத முடியாத காரணத்தினால் தான் விவாகரத்து முடிவை கையில் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சண்டை வந்தபோதெல்லாம் ரஜினிகாந்த் குடும்பம் பிரச்சனையை பேசி முடித்துவிட்டதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே விவாகரத்து தகவல் வெளியான பின்னர், இருவரின் நலம்விரும்பிகள் பிரபல நடிகரான கமல்ஹாசனை தொடர்பு கொண்டு சமாதானம் செய்து வைக்கச்சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் அவரோ, இந்த விடயத்தை தன்னால் தலையிட முடியாது என்றும், அவர்களே பேசிக்கொள்வது நல்லது எனவும் கூறிவிட்டாராம்.