தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து! ரஜினியின் ஆசை என்ன? நெருங்கிய வட்டாரங்கள் சொன்ன தகவல்
நடிகர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா மீண்டும் தனது கணவருடன் ஒன்று சேர வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆசைப்படுவதாக நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிக பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ்- ஐஸ்வர்யா மீண்டும் சேர வேண்டும் என்பதே ரஜினியின் ஆசையாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் அவருக்கு நெருக்கமான ஒருவர், ரஜினி சார் தனது மகளின் திருமண பிரிவை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார். பிரிவு தற்காலிகமானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
திருமண பிரச்னைகளை பேசி சீர்செய்யுமாறு தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யாவை வற்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் பிரிவு குறித்து ரஜினிகாந்த் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.