தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய இது தான் காரணமா? ஹொட்டலில் நடந்தது என்ன? வெளியான தகவல்
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்ததற்கான காரணம் குறித்து தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிக பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 16ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் இரவு நடந்த பார்டியில் இருவரும் கலந்து கொண்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அன்று இரவே இருவருக்கிடையில் சண்டை பயங்கரமாக வெடித்துள்ளது. அதன் பிறகு அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு ஐஸ்வர்யா தனுஷுக்கு போன் செய்து வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்பொழுதே இனி பிரிவது என்று இருவரும் முடிவு செய்துள்ளனர். மறுநாள் தனுஷ் ஐஸ்வர்யாவிடம் நேற்று இரவு பேசியது எல்லாம் உண்மை தானே என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஐஸ்வர்யாவும் ஆமாம் என்று கூறியதுடன் உங்களுடன் இனியும் சேர்ந்து வாழ முடியாது என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் இருவரும் டிவிட்டர் பக்கத்தில் தங்கள் பிரிவை அறிவித்துள்ளனர்.