தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவுக்கு இவர் தான் முக்கிய காரணமா? இணையத்தில் கசிந்த தகவல்
ரஜினி செய்த ஒற்றை செயலால் தான் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிந்ததாக இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டை இளைய மகளான சவுந்தர்யாவுக்கு எழுதி கொடுத்துள்ளார்.
இது தான் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. தனுஷுக்கு போயஸ் கார்டன் வீட்டின் மீது ஒரு கண் இருந்த நிலையில் அந்த வீடு கை விட்டுப்போனதால் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவிடம் சண்டை போட்டுள்ளார்.
இந்த விடயம் ரஜினிக்கு தெரியவர போயஸ் கார்டனில் புது வீடு கட்ட தனுஷை நிர்ப்பந்தித்தாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சொத்து விவகாரத்தில் ஐஸ்வர்யாவுக்கும் சவுந்தர்யாவுக்கும் இடையே போயஸ் கார்டன் வீட்டில் சண்டை வெடித்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.