தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து: சொத்துக்கு ஆசைப்பட்டு... பத்திரிக்கையாளர் தகவல்
தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்திற்கு லதா ரஜினிகாந்த் தான் காரணம் என பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இருவரும் விவாகரத்து பெற மாட்டார்கள் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டியில், இருவரின் விவாகரத்துக்கு லதா ரஜினிகாந்த் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தனக்கு படவாய்ப்புகள் இல்லாத போது குறைந்த பட்ஜெட் படங்களை தனுஷ் தயாரித்து வந்தார்.
அப்படித்தான் நானும் ரௌடி தான் படம் தயாரிக்க 6 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது, ஆனால் 16 கோடி ரூபாய் வரை செலவானது. விநியோகத்திலும் இப்படம் எதிர்பார்த்த அளவு செல்லாததால் வீட்டில் பிரச்சனை வெடித்தது.
தனுஷின் தந்தை படத்தயாரிப்புக்காக கடன் வாங்கினார், அதுவும் ரஜினியின் களங்கம் ஏற்படுத்தியது, இதற்கு ரஜினிகாந்த் பொறுப்பாககூடாது என லதா ரஜினிகாந்த் நினைத்தாராம்.
இதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, தனுஷிடம் இருந்து பிரித்தால் தான் சரிவரும் என லதா ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது.
தனுஷை நம்பி இருந்தால் உன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என ஐஸ்வர்யாவிடம் லதா கூறி மனதை மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டதால் ரஜினியின் சொத்துக்கள் மகள் மற்றும் பேரன்களுக்கு சென்றுவிடும் என தெரிவித்துள்ளார்.