மீண்டும் சேர்ந்து வாழலாம்! தனுஷிடம் கேட்டாரா ஐஸ்வர்யா? கசிந்த முக்கிய தகவல்
ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சந்தித்து பேசியதாக செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர், இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இருவரும் வேலை விஷயமாக ஒரே ஹோட்டலில் தங்கியுள்ள நிலையில், தனுஷை ஐஸ்வர்யா சந்தித்து தான் அவசரப்பட்டுவிட்டதாகவும், அப்பாவுக்காக மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என ஆசைப்படுவதாகவும் கூறியதாக தெரிகிறது.
அதற்கு தனுஷ் நாம் இருவரும் யோசித்து தான் இந்த முடிவை எடுத்தோம். ஆனால் நீ இந்த முடிவில் இருந்து மாறிவிட்டாய்.. என்னால் அப்படி உடனே மாற முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் தேவை என்று கூறியதாக சொல்லப்படுகின்றது.
இதனால் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.