ஒன்றாக 18 ஆண்டுகள்... விவாகரத்தை அறிவித்த நடிகர் தனுஷ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தமது மனைவி ஐஸ்வரியாவை பிரிவதாக அறிவித்துள்ளார்.
தமது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தனுஷ், 18 ஆண்டுகள் நண்பர்களாகவும், தம்பதியாகவும் பெற்றோராகவும் வாழ்ந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
????? pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
மேலும், இதுவரையான தங்கள் இருவரின் வாழ்க்கைப் பயணம் வளர்ச்சி, புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல் என இருந்துள்ளது எனவும்,
தற்போது இருவரும் தனித்தனியான பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளதாக தனுஷ் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு தம்பதியாக ஐஸ்வரியாவும் தாமும் பிரிந்து செல்ல முடிவு எடுத்துள்ளதாகவும், தனிப்பட்டமுறையில் தங்களை புரிந்து கொள்ள நேரமெடுத்துக் கொள்வதாகவும் தனுஷ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.