தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தில் ஏற்பட்ட புதிய திருப்பம்! கசிந்த தகவல்
தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து விடயத்தில் முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் தாங்கள் பிரிய போவதாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களை சேர்த்து வைக்க தனுஷ், ஐஸ்வர்யா குடும்பத்தார்களும், நட்பு வட்டாரங்களும் முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா இல்லை என்று கூறியுள்ளார். ஆகையினால் தனுஷ் வழக்கறிஞரிடம் விவாகரத்து செய்யாமல் வாழ்ந்தால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா என்று விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா தனது அப்பாவிற்காக இறங்கி வந்தாலும் தனுஷ் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று தொடர்ந்து முரண்டு பிடித்து வருகின்றார்.