பெற்றோர் விவாகரத்து குறித்து தனுஷ் மகன் கேட்ட ஒற்றை கேள்வி! அதிர்ந்து போன ரஜினிகாந்த்
தனுஷின் மகன் தனது பெற்றோர் விவாகரத்து குறித்து கேட்ட கேள்வி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிக பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். ஏற்கனவே மகளின் விவாகரத்து குறித்து சோகத்தில் உள்ள ரஜினிக்கு தனது பேரன் கேட்ட கேள்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ரஜினி யாத்ராவிடம் விரைவில் உன் பெற்றோர்கள் சமாதானமாகி விடுவார்கள் என்று கூறியதோடு உனக்கு அப்பாவுடன் இருக்க விருப்பமா இல்ல அம்மாவுடனா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு யாத்ரா இந்த கேள்வியை எனது அப்பா, அம்மாவிடம் கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடியுமா? எனக்கு இரண்டு பேரும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத ரஜினி அதிர்ந்து விட்டதாக கூறப்படுகின்றது.
தனுஷ்- ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தாரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக ரஜினி தனது மகளிடம் மாப்பிளையுடன் விட்டு கொடுத்து போகும் படி அறிவுரை கூறி வருகிறார்.