மாமனாரின் படத்திற்கு காத்திருக்கும் நடிகர் தனுஷ்: வைரலாகும் டுவீட்
இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படம் இந்த வாரம் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அனைவரையும் போலவே தனுஷும் உற்சாகத்தில் காத்திருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
'ஜெயிலர்'
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த திரைபடத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப்பெற்றது.
இத்திரைப்படம் இன்னும் ஒரு சில தினங்களில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் படத்திற்கு காத்திருப்பதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷின் ட்வீட்
நடிகர் தனுஷ் பல தசாப்தங்களாக தலைவர் ரஜினியின் மிகப்பெரிய ரசிகராக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறார். ஆகவே தனது முன்னாள் மாமனாரின் படத்திற்கு ஒரு ரசிகனாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
It’s JAILER week ???
— Dhanush (@dhanushkraja) August 7, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |