இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுதலை
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 6 ஆம் திகதி இவர் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 11 நாட்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவருக்கு ஆரம்ப பிணை மனுக்களை அவுஸ்திரேலியா நீதிமன்றம் கொடுக்க மறுத்தது.
இதனை தொடந்து தற்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அரசாங்கம் என்பன 150,000 அமெரிக்க டொலர் பிணைத்தொகை வழங்க முன்வந்ததையடுத்து அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இவர் தினமும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும், இரவு 9 மணி மற்றும் காலை 6 மணி வரை வெளியில் செல்ல தடை உள்ளிட்ட பிணை நிபந்தனைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், Tinder உள்ளிட்ட Dating செயலிகளை அணுகுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.