மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 யானைகள் - தனித்துவிடப்பட்ட 2 குட்டிகள் கண்டுபிடிப்பு
தர்மபுரியில் உயிரிழந்த யானைகளின் 2 குட்டிகள் 20 நாட்கள் தீவிர தேடுதல் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 3 யானைகள்
சமீபத்தில் தர்மபுரி, பாலக்கோடு அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பரிதமாக உயிரிழந்தன.
தாயை இழந்த 2 குட்டி யானைகளும் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் நுழைவதும், மீண்டும் தனது தாய் இருந்த இடத்திற்கு வந்து பார்ப்பதும் என சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. இறந்த 3 யானைகளை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சோகத்தில் சுற்றித் திரியும் குட்டிகள்
தாய் இல்லாமல் பரிதவித்து நிற்கும் குட்டி யானைகளை பிடிக்க வனத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
2 குட்டி யானைகள் கண்டுபிடிப்பு
இந்நிலையில், மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்ததால் தனித்துவிடப்பட்ட 2 குட்டி யானைகள் இருக்கும் இடம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
20 நாட்களாக வனத்துறையினர் தேடி வந்த நிலையில், தருமபுரி - கிருஷ்ணகிரி எல்லையில் உள்ள பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் இரு யானைகள் ஆரோக்கியமாக சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 2 யானைகளும் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி. உயிரிழந்த தாய் யானையை சுற்றி வரும் 9 மாத குட்டி யானை. #dharmapuri #elephants #elephantdeath #forest pic.twitter.com/D1rM11oVY0
— Ƭɴ Thiru ࿐திருலோகசந்தர் (@R_ThiruChandar) March 7, 2023