இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர்! இலங்கை அணியை வழிநடத்தப்போவது இவர் தான்
தசூன் ஷானக இந்தியாவுடனான தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபரில் ஆரம்பமாகும் டி-20 உலகக் கிண்ணம் வரை அவர் இலங்கை அணியின் தலைவராக இருப்பார் என்று நம்பகத் தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் தனஞ்சய டிசில்வா இந்திய தொடருக்காக இலங்கை அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஷானக்க இலங்கை அணியை முன்னரே வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷானக்கவின் தலைமையில் இலங்கை அணி 2019 இல் பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.
அதேநேரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரின் தலைவராகவும் ஷானக்க தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் விசா பிரச்சினைகள் காரணமாக, அவரால் சரியான நேரத்தில் அணியுடன் இணைந்து பயணிக்க முடியவில்லை. ஷானக்க இல்லாத நிலையில் அஞ்சலோ மெத்யூஸ் பொறுப்பேற்று அணியை வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.