முதல் இந்திய வீரர் இவர் தான்.. வரலாற்று சாதனை படைத்த தவான்!
பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் இந்திய வீரர் ஷிகர் தவான் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் 30 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
மேலும் ஐபிஎல் கிரிக்கெட் லீக்கில் இதுவரை 668 பவுண்டரிகளை தவான் விளாசியுள்ளார். உலக அளவில் 1000 பவுண்டரிகள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் 5வது வீரர் தவான் ஆவார். இதற்கு முன்பு கிறிஸ் கெயில், அலெக்ஸ் ஹால்ஸ், டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.
36 வயதாகும் ஷிகர் தவான் இதுவரை 196 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5911 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள், 44 அரை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.