இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
அதன் பின்னர் ஜூலை 22ஆம் திகதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான, ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா போன்ற இளம் வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
File Photo
ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவர் செயல்படுவர். சுழற்பந்து வீச்சுக்கு சஹால், அக்சர் படேலும், வேகப்பந்து வீச்சுக்கு ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷிதீப் சிங், ஷர்துல் தாக்கூரும் இடம்பெற்றுள்ளனர்.
PC: Twitter
அணி விபரம்: ஷிகர் தவான்(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், தீபக் ஹூடா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சஹால், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல், முகமது சிராஜ், அர்ஷிதீப் சிங், ஷர்துல் தாக்கூர், ஷ்ரேயாஸ் ஐயர்