ஏன் இப்படி பண்ண? ஷிகர் தவானை அடித்து உதைத்த தந்தை! வீடியோ
தன்னை தனது தந்தை அடித்து உதைக்கும் வீடியோவை ஷிகர் தவான் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடினார். அந்த அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகளை மட்டுமே பெற்றதால் பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.
எனினும் தவான் 453 ஓட்டங்கள் குவித்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 88 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் பிளேஆப் சுற்றுக்கு ஏன் போகவில்லை என கேட்டு அவரது தந்தை தவானை அடித்து உதைக்கிறார். முதலில் கன்னத்தில் அறை வாங்கும் தவான், பின் கீழே விழுகிறார். அதன் பின்னர் அவரது தந்தை உதைக்கிறார்.
தவான் விளையாட்டாக அடி வாங்கும் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் கமெண்டில் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.