அய்யோ அவுட் இல்லாம போச்சே! ஷிகார் தாவன் கொடுத்த செம ரியாக்ஷன்: கமெராவில் சிக்கிய காட்சி
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின் போது எல்பிடபில்யூவில் இருந்து அதிர்ஷ்டவசமாக டேவிட் மலான் தப்பியதால் தவான் அவுட் இல்லாம போச்சே என்ற ரியாக்ஷன் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 8 போட்டிகளில் 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில், போட்டியின் 10-வது ஓவரை டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் வீசிய போது, அதை பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் டேவிட் மலான் தடுத்து ஆட முற்பட்டார்.
— Cricket Unlimi (@CricketUnlimi) May 2, 2021
ஆனால் பந்தானது கால்காப்பில் பட்டதால், LBW கேட்கப்பட்டது.
அதற்கு நடுவர் இல்லை என்று கூறவே, டெல்லி அணி ரிவ்யூ எடுத்தது. அதில் அவுட் இல்லை என்று தெரியவர,ம் அதை ஸ்கிரீனில் பார்த்த டெல்லி வீரர் ஷிகார் தவான், அவுட் இல்லாம போச்சே என்று ரியாக்சன் செய்தார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.