திருபாய் அம்பானி பயன்படுத்திய கார் தற்போது தென்னகத்து சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு சொந்தம்
ஆசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியும், அவரது சகோதரர் அனில் அம்பானியும் இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர்கள்.
சொகுசு கார்கள்
முகேஷ் அம்பானிக்கு மும்பையில் உள்ள ஆண்டிலியா மாளிகை உட்பட பல ஆடம்பர சொத்துகள் உள்ளன. பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி ஃபெராரி கார்கள் முதல் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் உலகின் பிரபலமான பல சொகுசு கார்களையும் சேகரித்து வைத்துள்ளார்.
வெளியான தரவுகளின் அடிப்படையில் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 170க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் அவரிடம் உள்ளன. இருப்பினும், அவரது மறைந்த தந்தை திருபாய் அம்பானி மிகவும் விரும்பி பயன்படுத்தி வந்த காடிலாக் கார் தற்போது முகேஷ் அல்லது அல்லது அவரது சகோதரர் அனிலிடமும் இல்லை.
ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் பயன்படுத்திய அந்த கார் தற்போது தென்னகத்து சூப்பர் ஸ்டார் ஒருவர் சொந்தமாக்கியுள்ளார். அந்த பழங்கால அமெரிக்க கார் தற்போது மலையாள திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான மோகன்லாலிடம் உள்ளது.
பதிவு எண் MAS 2100
திருபாய் அம்பானி பயன்படுத்திய அந்த காடிலாக் கார் முதலில் மோகன்லாலின் மாமனார் திரைப்பட தயாரிப்பாளர் கே. பாலாஜி சொந்தமாக்கியுள்ளார். மட்டுமின்றி, பாலாஜி தயாரித்துள்ள பல படங்களில் அந்த காடிலாக் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், பாலாஜி எப்போது எப்படி இந்த காரை திருபாய் அம்பானியிடம் இருந்து வாங்கினார் என்ற தகவல் எதுவும் இல்லை. இது 1958 மொடல் இடது கை இயக்கம் கொண்ட காடிலாக் செடான் வாகனமாகும்.
கொச்சியில் உள்ள ஃபிளமிங்கோ கேரேஜால் மறு சீரமைப்பு செய்யப்படுவதற்கு முன்பு இந்த கார் மெரூன் நிறத்தில் இருந்தது. இந்த வாகனம் MAS 2100 என்ற பதிவு எண்ணைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |