இந்தியாவை ஆளும் Reliance நிறுவனம்! தீருபாய் அம்பானி இந்த பெயரை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?
இன்று பல கோடிகளில் வர்த்தம் நடத்தி வரும் இந்தியாவின் முதன்மை நிறுவனமான Reliance-க்கு முகேஷ்- அனில் அம்பானியின் தந்தை தீருபாய் அம்பானி நிறுவனத்திற்கு Reliance என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற ரகசியம் தெரியவந்துள்ளது.
அம்பானி குடும்பம்
அம்பானி சகோதரர்கள், முகேஷ் மற்றும் அனில், இந்தியாவின் மிகுந்த செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
முகேஷ் அம்பானி தற்போது ரூ.970678 கோடி என்ற மதிப்புமிக்க சொத்துக்களுடன் இந்தியாவின் மிகுந்த செல்வந்தராக உள்ளார். அனில் அம்பானியும் கடன் சுமைகளை சமாளித்த பிறகு மீண்டும் நிதி நிலையில் முன்னேற்றம் கண்டு வருகிறார்.
இரு சகோதரர்களும் பல்வேறு "ரிலையன்ஸ்" நிறுவனங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள். இந்த பெயரை அவர்களது தந்தையான தீருபாய் அம்பானி 1958 ஆம் ஆண்டில் குழுமத்தை நிறுவியபோது தேர்ந்தெடுத்தார்.
Reliance என்ற பெயருக்கான காரணம்
ரிலையன்ஸ் இந்தியாவில் ஒரு பிரபலமான பெயராக இருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள கதை பலருக்கு தெரியவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, தீருபாய் அம்பானி ரிலையன்ஸை சுயசார்பு மற்றும் சுதந்திரத்தின் சின்னமாக கருதினார்.
தனிநபர்களையும் சமூகங்களையும் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தங்கள் இலக்குகளை அடைய அதிகாரம் அளிக்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கும் என்று அவர் நம்பினார்.
Reliance Commercial Corporation என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பல்வேறு துறைகளில் ஈடுபடத் தொடங்கியதால், Reliance Industries Limited என பெயர் மாற்றப்பட்டது.
அதன் பெயருக்கு ஏற்ப, Reliance இந்தியாவில் மிகவும் நம்பகமான பிராண்டாக உருவெடுத்தது.
வரலாறு படைத்த Reliance
1977 ஆம் ஆண்டில், Reliance Textile Industries நிறுவனத்தின் பங்கு வெளியீடு (IPO) வரலாறு படைத்தது, இந்திய பங்குச் சந்தை ஆர்வத்தின் தொடக்கமாக அமைந்தது.
பங்குகளுக்கான விண்ணப்பங்கள் வெளியீட்டு அளவை விட ஏழு மடங்கு அதிகமாக இருந்தது, இது Reliance நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு உத்வேகம் அளித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Reliance Industries,
Mukesh Ambani,
Richest person in India,
Self-reliance,
Indian conglomerate,
IPO,
Retail,
Telecom,
Business,
Success story,
Anil Ambani, Dhirubhai Ambani,