200 சிக்ஸர்கள்! தோனி ஐபிஎல்லில் படைத்த மூன்று சாதனைகள்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிக்ஸர் விளாசியபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை எம்.எஸ்.தோனி படைத்தார்.
முதல் போட்டியில் சென்னை தோல்வி
ஐபிஎல் 16வது சீஸனின் முதல் போட்டியில் CSK மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மகேந்திர சிங் தோனி 7 பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 14 ஓட்டங்கள் விளாசினார். அவர் அடித்த சிக்ஸர் CSK அணிக்காக தோனி அடித்த 200வது சிக்ஸர் ஆகும்.
தோனியின் சாதனைகள்
இதன்மூலம் சென்னை அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் 20வது ஓவரில் மட்டும் அதிக சிக்ஸர் விளாசிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றார். அவர் இதுவரை 53 சிக்ஸர்களை 20வது ஓவரில் மட்டுமே அடித்துள்ளார்.
அதேபோல் கடைசி ஓவரில் 10 ஓட்டங்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலிலும் அவர் முதல் இடத்தில் உள்ளார். தோனி 30 முறை கடைசி ஓவரில் 10 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் பொல்லார்ட் (18 முறை), ஹர்திக் பாண்ட்யா (13 முறை) உள்ளனர்.