பரபரப்பான நேரத்தில் 'தல' தோனி அடித்த ஒரு சிக்ஸ்! ஐதராபாத்தை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஐ.பி.எல் 2021 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் சஹா களமிறங்கினர். ஜேசன் ராய் 2 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த கேப்டன் வில்லியம்சன் 11 ஓட்டங்களில் வெளியேறினார்.
End of powerplay!
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
4⃣1⃣ runs for @SunRisers
1⃣ wicket for @ChennaiIPL #VIVOIPL #SRHvCSK
Follow the match ? https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/j8OUegMhph
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், மறுபுறம் சற்று நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் சஹா அதிகபட்சமாக 44 ஓட்டங்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் வெளியேறினார்.
இறுதியில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அந்த அணியின் ஹேசில்வுட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளசிஸ் களமிறங்கினர்.
Another day, another 5⃣0⃣-run stand! ? ?@Ruutu1331 & @faf1307 complete a cracking half-century partnership. ? ? #VIVOIPL #SRHvCSK @ChennaiIPL
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
Follow the match ? https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/iFU0SBhtq8
தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 38 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டர் பந்துவீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த மொயீன் அலி 17 ரன்னில் ரஷீத் கான் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்துவந்த ரெய்னா இரண்டே ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடிய டுபிளசிஸ் 41 ஒத்தாங்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அம்பதி ராய்டு மற்றும் கேப்டன் தோனி சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இறுதியில் வெற்றி பெற 2 ஒட்டங்கள் தீவை என்ற நிலையில், தல தோனி ஒரு சிக்ஸ் அடிக்க, 19.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 139 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.
Rasiganai vellum Thalaivane ?#SRHvCSK #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/EHj5Qk4jdU
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) September 30, 2021
அம்பதி ராயுடு 17 ரன்னிலும், கேப்டன் தோனி 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும்.