சூப்பர் ஹீரோவாக மாறிய தோனி - மோஷன் போஸ்டரை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரா.ஃபிக் நாவலான அதர்வா தி ஆரிஜின் என்ற தொடரில் நடிக்க உள்ள நிலையில் அதற்கான மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணி கேப்டனாக விளையாடி வருகிறார். தோனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோனி எண்டர்டைமன்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் சென்னை அணி 2018ஆம் ஐ.பி.எல். பட்டத்தை வென்றது தொடர்பாக டாக்குமெண்டரியை தயாரித்து ஹாட் ஸ்டாரில் வெளியிட்டது.
இதனையடுத்து அந்த நிறுவனத்தின் அடுத்த படைப்பாக தோனியை வைத்து வெப் சீரிஸ் தயாரிக்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தோனியின் மனைவியுமான ஷாக்சி தோனி தெரிவித்தார்.
அதர்வா என்று பெரியடப்பட்டுள்ள இந்த அனிமேஷன் காமிக்ஸில் தோனி ஒரு அகோரியாக நடக்கிறார். அகோரியாக இருக்கும் தோனியை பிடித்து ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்கிறார். அப்போது பண்டைய காலத்தில் அகோரியின் சக்தி, வரலாறு தோனியின் மூலம் வெளிப்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் கதை.
இந்த கதை விறுவிறுப்பாகவும், புதியதாகவும் இருந்ததால் தான் இதனை தேர்வு செய்து அணிமேஷன் வெப் சீரிசாக எடுத்ததாக ஷாக்சி தோனி கூறினார். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவின் போர் வீரர் உடையில் போல் உள்ள தோனி, தீய சக்திகளை எதிர்த்து போராடுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இதனை தோனி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.