சென்னை மைதானத்தில் டோனி அன் கோ தீவிர வலைப்பயிற்சி
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி முதல் மே 30 ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கு தயாராகும் விதமாக 8 அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கிவிட்டனர், அதாவது இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை தவிற மற்ற வீரர்கள் ஐ.பி.எல் அணியுடன் இணைந்து வலை பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் 11-ம் தேதிலிருந்து பயிற்சியை தொடங்கினர்.
தோனி தலைமையில் அம்பதி ராயுடு, கெய்க்வாட், தமிழக வீரர்களான ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோர் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Back with the bat and ball. Jaddugar coming soon! #Yellove #WhistlePodu ?? @imjadejapic.twitter.com/TsVVuKs7A9
— Chennai Super Kings (@ChennaiIPL) March 11, 2021