சென்னை அணிக்கு உற்சாக வரவேற்பு: கோப்பையை கைப்பற்ற மீண்டும் களத்தில் இறங்கிய தோனி
மும்பையில் நடைபெறவிருக்கும் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்யின் முதல் போட்டிக்காக, சூரத் மைதானத்திற்கு பயிற்சிக்காக சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அங்குள்ள ரசிகர்கள் உற்சாகவரவேற்பு வழங்கியுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை சிலதினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.
இதற்கான பயிற்சிக்காக குஜராத்தில் உள்ள சூரத் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிக்காக சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு வழங்கி வரவேற்றுள்ளனர்.
??ℎ??? Surat! Those eyes that smile with ? give us the joy, everywhere we go! #SingamsInSurat #WhistlePodu ? pic.twitter.com/T8xwHjoqeI
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) March 7, 2022
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாக வரவேற்பு வழங்க தெருக்களில் திரண்டிருந்த ரசிகர்களின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியீட்டு "அபாரமான சூரத்" சென்னை அணியை சந்திக்கும் உற்சாகத்தில் சிரிக்கும் ரசிகர்களின் அந்த கண்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருகின்றன.
மேலும் இந்த வலைப்பயிற்சியில் அம்பதி ராயுடு, கே.எம்.ஆசிப், கேப்டன் தோனி மற்றும் U19 வீரரான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.
Shubh Aarambh @ Surat! ✨#SingamsInSurat #WhistlePodu ??
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) March 7, 2022