ரிஷாப் பண்ட் விக்கெட்டை தூக்கிய பத்திரனா! தோனி, தூபே அதிரடியில் CSK மிரட்டல் வெற்றி
லக்னோ சூப்பர் ஜெயென்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரிஷாப் பண்ட் அரைசதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயென்ட்ஸ் முதலில் துடுப்பாடியது.
மார்க்ரம் (6), பூரன் (8) இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷ் 30 (25) ஓட்டங்கள் எடுத்து ஜடேஜா ஓவரில் போல்டானார்.
எனினும் அணித்தலைவர் ரிஷாப் பண்ட் அதிரடியில் மிரட்டினார். அவருக்கு உறுதுணையாக பார்ட்னர்ஷிப் கொடுத்த ஆயுஷ் பதோனி 22 (17) ஓட்டங்கள் எடுத்தார். சிக்ஸர்களை பறக்கவிட்ட ரிஷாப் பண்ட் 42 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
Alti Palti De Ghumake 🔥 pic.twitter.com/bfmTIHWizR
— Lucknow Super Giants (@LucknowIPL) April 14, 2025
49 பந்துகளை எதிர்கொண்ட அவர், 4 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பத்திரனா ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அப்துல் சமாத் 20 (11) ஓட்டங்களில் ரன்அவுட் ஆக, பத்திரனா பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் அவுட் ஆனார்.
லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் சேர்த்தது. பத்திரனா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும், கம்போஜ் மற்றும் கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
தூபே, தோனி கூட்டணி
அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷைக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா கூட்டணி 29 பந்துகளில் 52 ஓட்டங்கள் குவித்தது.
ரஷீத் 27 (19) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து 37 (22) ஓட்டங்கள் எடுத்திருந்த ரச்சின் ரவீந்திரா lbw ஆகி வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய திரிபாதி (9), ஜடேஜா (7) இருவரையும் பிஸ்னோய் வெளியேற்ற, ஷிவம் தூபே (Shivam Dube) அதிரடியில் மிரட்டினார்.
அவருடன் கைகோர்த்த எம்.எஸ்.தோனியும் அதிரடி காட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் 19.3 ஓவரில் 168 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
The IMPACT player does it with MAX IMPACT 🤩
— IndianPremierLeague (@IPL) April 14, 2025
Shivam Dube 🤝 MS Dhoni with a match-winning partnership 💛@ChennaiIPL are 🔙 to winning ways 😎
Scorecard ▶ https://t.co/jHrifBlqQC #TATAIPL | #LSGvCSK pic.twitter.com/AI2hJkT9Dt
ஷிவம் தூபே 43 (37) ஓட்டங்களும், எம்.எஸ்.தோனி 26 (11) ஓட்டங்களும் விளாசினர். பிஸ்னோய் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |