இந்த 3 வீரர்களை எத்தனை கோடி செலவானாலும் CSK அணியில் எடுத்துடுங்க! தோனி போட்ட ஆர்டர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்று முக்கிய வீரர்களை எவ்வளவு செலவானாலும் எடுக்குமாறு தோனி அணி நிர்வாகத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணிக்காக கேப்டன் தோனி புதிய வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார்.
அதன்படி சில முக்கிய வீரர்களை அணியில் எடுக்க நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார். அதன்படி சிஎஸ்கேவுக்கு கடந்த 2 சீசன்களாக ருதுராஜ் கெயிக்வாட் - டூப்ளசிஸ் ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். நன்கு செட்டான ஜோடி என்பது மட்டுமல்லாமல், டூப்ளசிஸ் இன்னும் சிறப்பான ஃபார்மில் உள்ளார். கடந்த சீசனில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
கேப்டன் தோனியின் செல்லப்பிள்ளைகளில் தீபக் சஹாரும் ஒருவர். பவர் ப்ளே ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை கொண்டவர். சமீபத்தில் இந்திய அணிக்காக பவுலிங் மற்றும் பேட்டிங் என அதிரடி ஆல்ரவுண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எனவே இவரின் பெயரையும் தோனி குறித்து வைத்துள்ளார்.
சிஎஸ்கேவின் பலமே ஆழமான பேட்டிங் வரிசை தான். அந்தவகையில் ஷர்துல் தாக்கூர் இக்கட்டான சூழலில் விக்கெட் எடுப்பது மட்டுமல்லாமல், பேட்டிங்கும் சிறப்பாக செய்வார். ரன்கள் அதிகளவில் வாரி கொடுத்தாலும், அவரின் விக்கெட் எடுக்கும் திறமைக்காகவே மீண்டும் அணிக்குள் எடுக்க தோனி பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.