இந்திய அணியுடன் இணைந்தார் டோனி! முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்
இந்திய அணியின் ஆலோசகராக டோனி இணைந்துவிட்ட புகைப்படத்தை பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.
இதற்கான இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக டோனி ஒரு பைசா கூட சம்பளம் கேட்கவில்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று ஐபிஎல் முடிந்த நிலையில், இன்று இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடன் தல டோனியும் இன்று சேர்ந்துள்ளார்.
Extending a very warm welcome to the KING ?@msdhoni is back with #TeamIndia and in a new role!? pic.twitter.com/Ew5PylMdRy
— BCCI (@BCCI) October 17, 2021
இது தொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் டோனி, பயிற்சியாளரான ரவிசாஸ்திரி மற்றும் துணைப் பயிற்சியாளர்கள் உடன் உள்ளனர்.
மேலும், இதில் டோனி ஏதோ பேட்டிங் நுணுக்கங்களைப் பற்றி பேசுவது போல் தெரிவது குறிப்பிடத்தக்கது.