CSK அணி 10 வீரர்களுடன் தான் இந்த ஐபிஎல்ல விளையாடுது! பேட்டிங் விஷயத்துல டோனி கணக்கிலேயே இல்ல.. நாசூக்காக விமர்சித்த பிரபல வீரர்
2021 ஐபிஎல் தொடரில் டோனியின் பார்ம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 தொடர் சிஎஸ்கே அணிக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளது. 11 போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே 9 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு அடியெடுத்து வைத்துள்ளது.
ப்ளே ஆப் சுற்றுக்கு மற்ற அணிகள் தகுதி பெற சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றியும் முக்கியமான ஒன்றாகும். சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்ப கேப்டன் டோனியின் தலைமையே காரணம் என்று புகழ்ந்து வருகின்றனர்.
டோனி கேப்டன்ஷிப்பில் ஜொலித்தாலும் பேட்டிங்கில் அவரது ஃபார்ம் ஏமாற்றமாகவே உள்ளது. கேப்டன் மகேந்திர சிங் டோனி இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 11.40 ஆக உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசுகையில், மகேந்திர சிங் டோனி பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் விளையாடி வருவதால் எந்த நன்மையும் இல்லை.
கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக அவர் சிறப்பாக செயல்படுகிறார். சென்னை அணி 10 வீரர்கள் மற்றும் ஒரு கேப்டன் உடன் விளையாடி வருகிறது என்று அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்பியது தோனியின் கேப்டன்ஷிப் தான் என்றும் கூறி உள்ளார்.