தோனியால் தான் கிரிக்கெட் விளையாட வந்தேன்! மனம் திறந்த பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பார்த்தே மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உஸ்மான் தாரிக் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை
இந்தியா, இலங்கையில் வைத்து 2026ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
குரூப் ஏ பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி வீரர் உஸ்மான் தாரிக் தன்னுடைய வித்தியாசமான பந்துவீச்சு செய்கை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
உஸ்மான் தாரிக் பந்து வீசும் போது சில வினாடிகள் நிறுத்தி பந்துவீசுவது எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறது.

தோனி தான் காரணம்
இந்நிலையில் உஸ்மான் தாரிக் சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில், தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டிற்கு வந்ததற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தை பார்த்தேன், அதன் பிறகு தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டிற்கு வந்தேன், அந்த படத்தில் உள்ளது போல தோனியின் கதையும், என்னுடைய கதையும் ஒரே மாதிரி இருப்பதாக என தோன்றியது.

அதாவது அந்த படத்தில் தோனி ஒரு வேலையில் இருப்பார், அதைப்போலவே நானும் ஒரு வேலையில் இருந்தேன், பின்னர் தன்னுடைய நிலையில் இருந்து வரலாறு படைத்த மனிதர் ஒருவர் இங்கே இருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.
தோனியின் பாதையை தொடரலாம், ஆனால் நான் ஒரு சாதாரண மனிதன், மற்றவர்களை போல் அல்லாமல் நான் வெற்றியடைய நிறைய உழைக்க வேண்டி இருந்ததாக தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |