தோனி இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை! CSK தோல்வி குறித்து சேவாக் விமர்சனம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியுடன் தோல்வியை சந்தித்ததற்கு கேப்டன் தோனியின் முடிவுகள் முக்கிய காரணமாக அமைந்தது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
முதல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி
ஐபிஎல்-லில் 16வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
இந்த போட்டியில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 178 ஓட்டங்கள் குவித்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் அபாரமாக ஆடி 52 பந்துகளில் 92 ஓட்டங்கள் குவித்தார்.
179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
இறுதியில் குஜராத் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்து அசத்தியது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி பெற்றது.
தோல்விக்கு தோனியின் முடிவே காரணம்
இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு கேப்டன் தோனியின் முடிவே முக்கிய காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேவாக் பேசிய போது, பந்துவீச்சில் அனுபவம் மிக்கவரான மொயின் அலியை கேப்டன் தோனி மத்திய வரிசை ஓவர்களில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
அதே சமயம் துஷார் தேஷ்பாண்டேவை அவர் அதிகம் பயன்படுத்தி இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
முக்கியமான கட்டத்தில் Impact வீரர் விதியை செயல்படுத்தி, அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டே-வை பில்டிங்கின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறக்கியது.
சென்னை அணியின் முதன்மை வீரராக செயல்பட்ட துஷார் தேஷ்பாண்டே 3.2 ஓவர் பந்துவீசி 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.
இது சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.