தோனி VS ஐடேஜா! பறக்கவிட்ட ஜடு.. தெறிக்கவிட்ட தல! வைரலாகும் சிஎஸ்கே பயிற்சியின் போது நடந்த தரமான சம்பவத்தின் வீடியோ
சிஎஸ்கே பயிற்சியின் போது தோனியும் ஜடேஜாவும் போட்டி போட்டு விளையாடி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதவிருக்கின்றன.
இந்நிலையில், சிஎஸ்கே அணி பயிற்சியின் போது ஜடேஜாவுக்கு தோனி பந்து வீசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
தோனி வீசிய ஒவ்வொரு பந்தையும் ஜடு பறக்க விட, கடைசியில் தல ஸ்டம்பை தெறிக்க விட்டு ஜடேஜாவை விக்கெட் எடுத்தார்.
குறித்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி பந்து வீசுவதை வீடியோ வயிலாக பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள், அதை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.